வீட்டு மின்கட்டணம் உயரவில்லை: வர்த்தக ரீதியான கட்டணம் மட்டுமே உயர்வு   30-07-10

தமிழகத்தில் மின்கட்டண உயர்வு தொடர்பாக, மின்சார வாரியம் விண்ணப்பித்துள்ள மனு மீதான கருத்துக் கேட்பை தொடர்ந்து, புதிய மின் கட்டண ஆணையை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்று வெளியிட்டது. புதிய மின் கட்டண ஆணையில், கட்டண உயர்வு தொடர்பான விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது மின் இணைப்பு பெற்றுள்ள இரண்டு கோடியே ஐந்து லட்சத்து 16 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன. இதில், ஒரு கோடியே 38 லட்சம் பேர், வீடுகளுக்கு இணைப்பு பெற்றுள்ளனர். தமிழகத்தில் கடந்த 2003 மார்ச் மாதம் 15ம் தேதி மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு மின் கட்டணத்தை உயர்த்துவது ...




தடை செய்யப்பட்ட பவளப்பாறைகள் ராமர் கல் என கூறி விற்பனை   30-07-10

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் மடம், சிறு கோயில்களில், தடை செய்யப்பட்ட பவளப்பாறைகளை, ராமர் கல் என கூறி 500, 1000 ரூபாய்க்கு விற்பனைசெய்வது தொடர்கிறது. மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் பலவகை பவளப்பாறைகள் உள்ளன. கடலில் சாக்கடை, ரசாயனக்கழிவு, வெட்டியெடுப்பது, தடை வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பது, பாசி வளர்ப்பது போன்ற காரணங்களால் அழிந்து வரும் பவளப்பாறைகளை பாதுகாக்க, அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. பவளப்பாறைகளை வெட்டியெடுப்பது, வைத்திருப்பது சட்டவிரோத செயலாக அறிவிக்கப்பட்டு தண்டனைகளும் வழங்கப்பட்டு வரும் நிலையில், ...




காமன்வெல்த் விளையாட்டு ஊழல் : சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவு   30-07-10

புதுடில்லி : டில்லி காமன்வெல்த் விளையாட்டு தொடர்பான பல்வேறு முறைகேடுகள் அம்பலமாகியுள்ளன. தரமில்லாத மைதானங்கள் கட்டப்பட்டுள்ளது, "டெண்டரில்' திருத்தம் மற்றும் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பதை மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் கண்டுபிடித்துள்ளது. ஒரு "டெண்டரில்' நடந்த மோசடி பற்றி விசாரிக்கும்படி சி.பி.ஐ.,க்கு பரிந்துரை செய்துள்ளது. டில்லியில் வரும் அக்டோபரில் (3-14) காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடக்க உள்ளது. இதற்கான பயிற்சி அரங்கம், நீச்சல் மையம், தடகள பாதை அமைப்பது உள்ளிட்ட 16 திட்டங்களில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது பற்றி ...




ம.தி.மு.க., - பா.ம.க.,வுக்கு மாநில கட்சி அங்கீகாரம் ரத்து   30-07-10

புதுடில்லி : புதுச்சேரியில் பா.ம.க.,வும், தமிழகத்தில் ம.தி.மு.க.,வும் மாநில கட்சி அந்தஸ்தை இழந்துள்ளன. லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், தேசிய கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. ஒரு கட்சியின் மாநில மற்றும் தேசிய கட்சி அந்தஸ்து தொடர வேண்டும் எனில், அந்தக் கட்சி முந்தைய லோக்சபா அல்லது சட்டசபை தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத ஓட்டுகளைப் பெற்றிருக்க வேண்டும்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் ம.தி.மு.க.,வும், புதுச்சேரியில் பா.ம.க.,வும் 6 சதவீத ஓட்டுக்களைப் பெறவில்லை. அதனால், உங்களின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என, கேட்டு தேர்தல் கமிஷன் இந்த ...




அரசியலில் நுழைய மாட்டேன்: நரேஷ் குப்தா   30-07-10

சென்னை : ""நான் ஒரு சாதாரண ஆள்; அரசியலில் நுழையும் எண்ணம் எனக்கு இல்லை,'' என இன்று ஓய்வு பெற இருக்கும் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வந்த நரேஷ் குப்தா இன்று ஓய்வு பெறுகிறார். புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக, நிதித்துறை செயலர் பிரவீன்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். நரேஷ் குப்தா, தலைமைச் செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் தங்களது பெயர்களை நீக்கவும், சேர்க்கவும் கடந்த 26ம் தேதி வரை 31 லட்சத்து 12 ஆயிரத்து 665 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவை முதலில், ...




தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி அபார வெற்றி : காங்கிரஸ் படுதோல்வி   30-07-10

ஐதராபாத் : ஆந்திர சட்டசபை இடைத் தேர்தலில், தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை முன்வைத்து போட்டியிட்ட தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி, 11 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றுள்ளது. ஒரு தொகுதியில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. காங்., மாநில தலைவர் ஸ்ரீநிவாஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். ஆந்திராவில் கடந்தாண்டு தெலுங்கானா கோரிக்கையை முன்வைத்து, போராட்டம் வெடித்தது. சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்.,) தலைவர் சந்திரசேகர ராவ், சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த 12 எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா ...




தமிழகத்தில் தேர்தல் இப்போது இல்லை: புதிய கமிஷனர் குரேஷி   30-07-10

புதுடில்லி : ""தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் முன்னரே சட்டசபை தேர்தல் நடப்பதற்கான வாய்ப்பு இல்லை; தேர்தல் பற்றி ஆலோசிக்க இன்னும் கால அவகாசம் உள்ளது,'' என புதிய தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி கூறியுள்ளார். தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த நவீன் சாவ்லாவின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய தலைமை தேர்தல் கமிஷனராக எஸ்.ஒய்.குரேஷி நேற்று பொறுப்பேற்றார். கடந்த 1971ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., பிரிவைச் சேர்ந்த இவர், நாட்டின் 17வது தலைமை தேர்தல் கமிஷனர். 1947ம் ஆண்டு டில்லியில் பிறந்த குரேஷி, வரலாற்றில் முதுகலை பட்டமும், பின்னர் தகவல் தொடர்பு மற்றும் சமூகவியல் ...




ஆகஸ்ட் 2ம் தேதி முதல் லாரி ஸ்டிரைக்: 22 லட்சத்து 500 லாரிகள் ஓடாது   30-07-10

சென்னை: மத்திய அரசின் சுங்கவரி முறைகேட்டை சீரமைக்க வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட, தென்மாநில மோட்டார் டிரான்ஸ்போர்ட் சங்கம் முடிவு செய்துள்ளது. சென்னை ராயபுரத்தில் தென்மாநில மோட்டார் டிரான்ஸ்போர்ட் சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம், தென்இந்திய மோட்டார் அசோசியேஷன் தலைவர் கோபால், அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா ஆகியோர் தலைமையில் நேற்று நடந்தது. இதில், மத்திய அரசின் சுங்கவரி வசூலிப்பில் நடந்து வரும் முறைகேடுகளை சீரமைக்கவும், இதர கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் நாளை மறுதினம் (ஆக., 2) ...




உல்லாச வாழ்க்கை வாழ கொள்ளையடித்த சிறுவன் கைது   30-07-10

சென்னை : கடந்த இரண்டு ஆண்டுகளாக திருட்டு, கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட சிறுவன் போலீசாரிடம் சிக்கினான். மாதவரம், தபால் பெட்டி கண்ணப்புரம் தெருவைச் சேர்ந்த ரமேஷ் மகன் சூரி(16, பெயர் மாற்றப்பட்டுள்ளது). சிறு வயதில் பெற்றோரை இழந்த இவன், பாட்டி வீட்டில் வளர்ந்தான். போதிய பராமரிப்பில்லாத காரணத்தால் கடந்த 2007ம் ஆண்டு முதல் திருட்டு, கொள்ளைகளில் ஈடுபட்டான். முதல் முதலில் மாதவரத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 9 ஆயிரம் ரூபாய் திருடி, போலீசாரிடம் சிக்கியதால் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டான். ஆறு மாதத்திற்கு பின் விடுதலையானான். அதன் பின் ...




News Widgets & Tickers
Powered by BlastCasta