BBCTamil.com | முகப்பு | Tamil News index
ஆரையம்பதி உள்ளூராட்சியினர் உண்ணாவிரதம் மட்டக்களப்பு ஆரையம்பதி உள்ளுராட்சி சபை நிர்வாக எல்லைக்குள் காத்தான்குடி நகர சபை அத்துமீறி செயல்படுவதாக குற்றம் சுமத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுள்ளது
இந்தியா-இலங்கை சமநிலை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கொழும்பில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி சம நிலையில் முடிந்துள்ளது.
"இந்திய பிரிட்டன் வர்த்தகம் இரட்டிப்பாகும்" பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்த்துவதற்கு, இரு நாட்டு பிரதமர்களுக்கிடையில் புதிய ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டுள்ளது
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி லண்டனில் உண்ணாவிரதம் இருந்தபோது இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்
வளர்ச்சி பாதையில் கிழக்கு மாகாணம்? இலங்கையில் கிழக்கு மாகாணம் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டு மூன்று வருடங்கள் ஆகியுள்ள போதிலும் அங்கு முற்றிலுமாக இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை என பலதரப்பினர் கூறுகிறார்கள்.
பிற்பாடுதான் மதமாற்றம்: உமா சங்கர் இந்திய அரசுப் பணி வேலைக்கு தேர்வு எழுதும்போது இந்து தலித்தாகத்தான் இருந்ததாகவும் பின்னர்தான் கிறிஸ்தவராக மதம் மாறியுள்ளதாகவும் பதவி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள உமா சங்கர் தெரிவித்துள்ளார்.
பாக் விமான விபத்தில் 152 பேர் பலி பாகிஸ்தானில் ஏற்பட்ட ஒரு விமான விபத்தில் அதிலிருந்த 152 பேரும் பலியாகியுள்ளனர். இந்த விமானம் கராச்சியிலிருந்து இஸ்லாமாபாதுக்கு சென்று கொண்டிருந்தது
இந்தியாவில் பிரிட்டிஷ் பிரதமர் இந்தியா வந்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் அவர்கள், இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், பிரிட்டனில் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் இந்தப் பயணத்தில் முன்னுரிமை அளித்திருக்கிறார்
இரானுக்கு எதிராக புதிய தடைகள் இரானின் அணுசக்தித்திட்டம் குறித்த விஷயத்தில், அந்த நாட்டுக்கெதிராக புதிய கடுமையான தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் முறையாக விதித்திருக்கிறது.
பாகிஸ்தானில் டிரோன் தாக்குதல்கள் பாகிஸ்தானில் அமெரிக்க டிரோன் ஆளில்லா விமானங்கள் நடத்திவரும் தாக்குதல்களால் தமக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தாலிபான்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
"ஆபத்தான ஆஸ்பெஸ்டாஸ்" ஆஸ்பெஸ்டாஸை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் அடுத்த இருபது ஆண்டுகளில் அதனால் ஏற்படும் இறப்புகள் பெரிய அளவில் அதிகரிக்கும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்
இலங்கையில் ரோபேர்ட் பிளேக் பான் கி மூனுக்கு ஆலோசனை வழங்குவதற்கான குழு இலங்கைக்கு நல்ல பலனைத் தரும் என்று நம்புவதாக அமெரிக்காவின் அரசுத்துறைத் துணைச் செயலர் ரொபேர்ட் பிளேக் அவர்கள் கூறியிருக்கிறார்.
பாலகுமாரன், யோகி பற்றித் தெரியாது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களாக இருந்த பாலகுமாரான், யோகி ஆகியோரின் மனைவிமார்களை சந்தித்துள்ள அமைச்சர் ட்யூ குணசேகர அதே நேரம் அவர்களின் நிலை பற்றித் தெரியாது என்கிறார்.
ஊடகங்களின் செயற்திறனுக்காக அதிகாரசபை இலங்கையில் ஊடகங்களின் தொழிற்சார் திறனை விருத்தி செய்யும் பொருட்டு புதிய 'ஊடக வழிகாட்டு நெறிமுறைகளை' அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகின்றது.
வறுமை -இந்தியா முதலிடம் ஆப்ரிக்காவின் 26 நாடுகளில் உள்ள வறியவர்களின் எண்ணிக்கையை விட எட்டு வட இந்திய மாநிலங்களில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறது புதிய ஆய்வு
இந்திய ரூபாய்க்கு புதிய குறியீடு சர்வதேச அளவில் இந்திய நாணயத்துக்கான அங்கீகாரம் பெறும் முயற்சியாக இந்திய ரூபாய்க்கு புதிய குறியீட்டுக்கு இந்திய நடுவணரசின் அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்திருக்கிறது.
நூலாசிரியர் சிங்கப்பூரில் கைது சிங்கப்பூர் அரசாங்கம் மரண தண்டனையை பயன்படுத்தும் விதம் குறித்து புத்தகம் ஒன்றை எழுதிய பிரிட்டிஷ் எழுத்தாளர் ஒருவரை சிங்கப்பூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
"காமன்வெல்த் போட்டிகள் வீண்செலவு" காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடுவது வீண் செலவு என்று முன்னாள் அமைச்சர் மணி சங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.
கொசோவோ பிரிவினை சரி-சர்வதேச நீதிமன்றம் செர்பியாவில் இருந்து கொசோவா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் அல்ல என்று தி ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஐ நா ஆலோசனைக் குழு கூட்டம் இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூனுக்கு ஆலோசனை கூற நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றுள்ளது.
படிப்பை கைவிட நேர்ந்தவர்கள் யுத்தம், சுனாமி மற்றும் பல்வேறு சமூகக் காரணங்களால் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமது பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்டுள்ளது பற்றிய விசேடத் தொடரின் இரண்டு பாகங்கள்.
ததேகூ கருணாநிதி சந்திப்பு இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் இலங்கை நிலவரம் குறித்துப் பேசினர்.
ஆப்கானிஸ்தான் மாநாடு ஆப்கான் அதிபர் ஹமீட் கர்சாய் அவர்கள், 2014 ஆம் ஆண்டில் தமது நாட்டு படையினரே நாட்டின் பாதுகாப்புப் பொறுப்பை முற்றாக ஏற்பார்கள் என்று கூறியுள்ளார்.
இந்தியா- பாக். பேச்சுவார்த்தை தோல்வியில் இந்திய-பாகிஸ்தான் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளின் போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நடந்துகொண்ட விதம் குறித்து, பாகிஸ்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் விமர்சித்துப் பேசியுள்ளார்.
விளம்பரம் -சச்சினை முந்தினார் தோனி இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் எம் எஸ் தோனி, விளம்பரங்களில் நடிப்பது தொடர்பாக 200 கோடி ரூபாய் வருமானம் தரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
'வன்முறை பேச்சு': சீமான் கைது வன்முறை மற்றும் பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டு 'நாம் தமிழர்' இயக்கத் தலைவரும் தமிழ்த் திரைப்பட இயக்குநருமான சீமான் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆசியாவில் முதியோர் கவனிப்பு குறைவு ஆசியாவில் இருக்கும் நாடுகளில் செல்வ வளம் அதிகரித்து வந்தாலும், அங்கு இறக்கும் தருவாயில் இருக்கும் மக்களை பல நாடுகள் போதுமான அளவில் கவனிப்பதில்லை என ஒரு ஆய்வு கூறுகிறது
தமிழ்அகதிகள் குறித்து ஐநா புதிய கொள்கை அகதி அந்தஸ்து கோரும் இலங்கைத் தமிழர்களின் விண்ணப்பங்கள் - இலங்கையின் பரந்துபட்ட அரசியல் நிலைமையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பரிசீலிக்கப்பட்ட நிலைமை இனி இருக்காது என்று ஐ நா கூறுகிறது.
விமல் வீரவன்ச உண்ணாவிரதம் இலங்கைப் போர் குற்றங்கள் தொடர்பாக ஐ நாவின் பொதுச் செயலருக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழு அமைக்கப்பட்டதை கண்டித்து அமைச்சர் விமல் வீரவன்ச காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
தமிழர்கள் பொலிஸில் பதிய உத்தரவு இலங்கையின் தலைநகர் கொழும்பின் சில பகுதிகளில் தமிழர்கள் மீண்டும் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதாக இலங்கை ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
சாதனை சாத்தியமானது எப்படி? சர்வதேச கிரிக்கெட் உலகில் முத்தையா முரளிதரனின் சாதனை தனித்தன்மை மிக்கது என்றும், முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கூறுகிறார் இந்தியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் எரபள்ளி பிரசன்னா
கோஹினூர் கோரிக்கை நிராகரிப்பு பிரிட்டிஷ் அரச குடும்பத்திடம் இருக்கும் கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு திரும்ப அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ஏற்க பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் மறுப்பு
சச்சின் 48 ஆவது சதமடித்தார் சச்சின் டெண்டூல்கர் தனது 48 ஆவது டெஸ்ட் சதத்தை அடித்துள்ளார். வீரேந்தர் ஷேவாக் ஒரு ஓட்டத்தில் சதத்தை தவற விட்டார்
செய்தி உண்மையில்லை - பாகிஸ்தான் தாலிபான்களுக்கு தீவிர ஆதரவாக பாகிஸ்தானின் உளவுப்படை செயற்பட்டது என்ற குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் கடுமையாக நிராகரித்துள்ளது.